1. Home
  2. தமிழ்நாடு

ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவு - தவெக தலைவர் விஜய் இரங்கல்..!

Q

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலை காலமானார்.இவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்..
இந்நிலையில் தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் தன் இரங்கலை தெரிவித்துள்ளார்.
அவர் பதிவிட்டுள்ள டீவீட்டில் மிகப்பெரிய அரசியல் பாரம்பரியத்தைக் கொண்டவரும், தந்தை பெரியாரின் குடும்பத்தைச் சேர்ந்தவரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரும், முன்னாள் ஒன்றிய ஜவுளித்துறை இணை அமைச்சரும், தற்போதைய ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான திரு. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்கள் உடல்நலக்குறைவால் காலமான செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன். அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் காங்கிரஸ் கட்சியினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். திரு. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன் என பதிவிட்டுள்ளார் 

Trending News

Latest News

You May Like