1. Home
  2. தமிழ்நாடு

உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு தவெக கட்சி தலைவர் விஜய் நிதியுதவி..!

1

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தனது கட்சியின் முதல் மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்தினார்.இந்த மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர்.

இந்த மாநாட்டில் தனது கட்சியின் கொள்கையை அறிவித்த விஜய், தனது அரசியல் எதிரி யார், சித்தாந்த எதிரி யார் என்பதையும் வெளிப்படையாக அறிவித்தார். மாநாடும் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இந்த மாநாட்டில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான தொண்டர்களும் ரசிகர்களும் பங்கேற்றனர்.

அப்போது மாநாட்டிற்கு வருகை புரிந்தவர்களில் 6 பேர் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். அதன்படி திருச்சியில் இருந்து காரில் மாநாடு நடைபெற்ற விக்கிரவாண்டிக்கு வருகை தந்த சீனிவாசன் மற்றும் கலைக்கோவன் ஆகியோரின் கார் விபத்துக்குள்ளானதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதேபோல் சென்னையில் இருந்து இருசக்கர வாகனத்தில் புறப்பட்ட இரண்டு இளைஞர்கள் சென்னை தேனாம்பேட்டை அருகே நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தனர்.

சென்னை கீழ்பாக்கத்தை சேர்ந்த சார்லஸ் என்பவர் மாநாட்டு திடலில் மயங்கி விழுந்தார். இதை எடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் பங்கேற்க வந்த 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்தார் விஜய். ஆனால் அவர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி எதுவும் செய்யவில்லை.

இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதி நிதி உதவி அளித்துள்ளார். சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு 6 பேரின் குடும்பத்தினரையும் அழைத்த விஜய் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் நிதி உதவி வழங்கியுள்ளார்.

Trending News

Latest News

You May Like