1. Home
  2. தமிழ்நாடு

திடீரென முடங்கிய டிவிட்டர்...!

1

உலகம் முழுவதும் பல கோடி மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் சமூக வலைதளங்களில் ஒன்று டிவிட்டர். தங்களின் கருத்துக்களை வெளிப்படுத்துவது, போட்டோக்கள் மற்றும் வீயோக்களை ஷேர் செய்வது என பலவற்றுக்கும் மக்கள் டிவிட்டர் சமூக வலைதளத்தை பயன்படுத்தி வருகின்றனர். கம்ப்யூட்டர், லேப்டாப், செல்போன் என அனைத்தின் மூலம் டிவிட்டர் சமூக வலைதளத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் டிவிட்டர் சமூக வலைதளம் திடீரென முடங்கியது. இதனால் பயனாளர்கள் பெரும் பாதிப்புக்கு ஆளானார்கள்.

இந்த நிலையில் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளிலும் இன்று காலை 10:41 மணிக்கு துவங்கி இந்த தளம் திடீரென முடங்கியதாக பயனர்கள் பிற சமூக வலைதளங்களில் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ’டவுன்டிடெக்டர்’ என்ற இணையதள ஆய்வு நிறுவனம் நடத்திய ஆய்வில், மொத்த பயனர்களில் 58 சதவீதம் பேர் எக்ஸ் தளத்தின் இணையதளத்தை பயன்படுத்த முடியாமல் தவித்ததாக தெரிவித்துள்ளனர். எதனால் இந்த தளம் திடீரென முடங்கியது என்பது தெரியாத நிலையில், சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக எக்ஸ் தளத்தை பயன்படுத்த முடியாத நிலை உருவானதாக பயனர்கள் தெரிவித்துள்ளனர். 

Trending News

Latest News

You May Like