1. Home
  2. தமிழ்நாடு

பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்!

1

தமிழ்நாடு முழுவதும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின. இந்த தேர்வில் மொத்தம் 8,94,264 மாணவ/மாணவியர் பங்கேற்றிருந்தனர்.இவர்களில் 8,18,743 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டின் ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் 91.55 ஆகும். தேர்ச்சி விகிதத்தில் அரியலூர் மாவட்டம் முதலிடத்திலும், சிவகங்கை இரண்டாம் இடத்திலும் ராமநாதபுரம் மூன்றாம் இடத்திலும் கன்னியாகுமரி 4ஆம் இடத்திலும் திருச்சி 5ஆம் இடத்திலும் உள்ளது.இதன் வரிசையில் சென்னை 89.14 சதவிகித தேர்ச்சியுடன் 30ஆம் இடத்தில் உள்ளது.

சென்னை, திருப்பத்தூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு கள்ளக்குறிச்சி திருவள்ளூர் திருவண்ணாமலை ராணிப்பேட்டை வேலூர் ஆகியவை கடைசி 10 இடங்களில் உள்ளன.வழக்கம்போல் இந்த முறையும் மாணவர்களை விட மாணவிகளே அதிக விகிதத்தில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


ராசிபுரத்தை சேர்ந்த இரட்டையர்கள் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தலா 463 மதிப்பெண்களை பெற்று தேர்ச்சியடைந்துள்ளனர்.இந்த தகவல் கிடைத்ததும் மாணவர்களும் அவர்களது உறவினர்களும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஒன்றாக பிறந்த இரட்டையர்கள் உருவத்திலும், செயலிலும் ஒன்றாக செயல்படுவர் என்பது பொதுவான கருத்து . அதற்கு ஒருபடி மேலாக இந்த இரட்டை சகோதரர்கள் 10 ஆம் வகுப்பு பொது தேர்வில் ஒரே மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். ஒரே மதிப்பெண் பெற்றதால் இந்த இரட்டை சகோதரர்கள் மற்றும் பெற்றோர் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.


 

Trending News

Latest News

You May Like