த.வெ.க தொண்டர்கள் ஷாக்..! ரோடு ஷோ-வுக்கு அனுமதி கிடையாதாம்..! பிரசாரம் தொடங்க மட்டும் போலீஸ் அனுமதி..!
த.வெ.க தலைவர் விஜய், விமான நிலையத்தில் இருந்து டி.வி.எஸ் டோல்கேட், தலைமை தபால் நிலையம், காந்தி மார்க்கெட் மரக்கடை பகுதிக்கு சுமார் 11 மணியளவில் வருகை தருகிறார். திருச்சி காந்தி மார்க்கெட் மரக்கடை பகுதியில் விஜய் பிரச்சார வாகனத்திலிருந்து பேசுவதற்கு காவல்துறை சார்பில் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் ரோடு - ஷோ நடத்தக்கூடாது என சில கட்டுப்பாடுகளை போலீசார் விதித்துள்ளனர். முன்னதாக த.வெ.க வடக்கு மாவட்ட செயலாளர் குடமுருட்டி கரிகாலன் உள்ளிட்ட வழக்கறிஞர் பிரிவை சார்ந்த 50க்கும் மேற்பட்டோர் காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள திருச்சி மாநகர துணை ஆணையர் அலுவலகத்தில் விஜய் காந்தி மார்க்கெட் பகுதியில் பிரச்சாரம் செய்ய அனுமதி கோரி மனு அளித்தது குறிப்பிடத்தக்கது.