த.வெ.க தலைவர் விஜயின் மாஸ்டர் பிளான்..! ஒரு மாநில மாநாடு , 4 மண்டல மாநாடு..!
நடிகர் விஜய் நேரடி அரசியலில் ஈடுபட்டதும் சூட்டோடு சூடாக கட்சிப் பெயரை அறிவித்தார்.இதையடுத்து அவர் தனது கட்சியின் முதல் மாநாட்டை மதுரையில்தான் நடத்துவார் என அரசியல் ஆய்வாளர்கள் ஆரூடம் தெரிவித்தனர்.
கட்சி தொடங்கியதும் முதல் கட்டமாக இரண்டு கோடி உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு அவர் உத்தரவிட்டிருந்தார்.தொடக்கத்தில் நிர்வாகிகள் இது தொடர்பான நடவடிக்கைகளை விரைவாக மேற்கொண்டனர். எனினும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடாததால் கட்சியினர் மத்தியில் சிறிது தொய்வு ஏற்பட்டிருந்ததாகத் தெரிகிறது.
இந்நிலையில், விஜய்யின் அடுத்தகட்ட அறிவிப்புகளுக்காக நிர்வாகிகளும் தொண்டர்களும் காத்திருக்கின்றனர்.
இதற்கிடையே, 4 மண்டல மாநாடு, 10 மாவட்ட பொதுக் கூட்டங்களை நடத்த விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதல் மாநாடு திருச்சியில், செப்டம்பர் அல்லது நவம்பரில் நடக்க வாய்ப்பு உள்ளதாகவும். 100 சட்டமன்ற தொகுதிகளில் நடைப்பயணம் செல்லவும் விஜய் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.