1. Home
  2. தமிழ்நாடு

அமித்ஷா பேச்சுக்கு த.வெ.க தலைவர் கடும் கண்டனம்..!

Q

அமித் ஷாவின் பேச்சுக்கு த.வெ.க தலைவர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். எங்கள் கொள்கைத் தலைவரை அவமதிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

 

அண்ணலை அவமதித்த ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சரை, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறேன் என விஜய் பதிவிட்டுள்ளார். 'அம்பேத்கரின் பெயரை பயன்படுத்துவது இப்போது ஒரு "பேஷன்" ஆகிவிட்டது' என அமித் ஷா பேசியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

 

இதுதொடர்பாக தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் தளத்தில், “யாரோ சிலருக்கு வேண்டுமானால் அம்பேத்கர் பெயர் ஒவ்வாமையாக இருக்கலாம். சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் இந்திய மக்கள் அனைவருக்கும் அவர்கள் உயரத்தில் வைத்துப் போற்றும் ஒப்பற்ற அரசியல் மற்றும் அறிவுலக ஆளுமை, அவர்.

அம்பேத்கர்...

அம்பேத்கர்... அம்பேத்கர்...

அவர் பெயரை

உள்ளமும் உதடுகளும் மகிழ

உச்சரித்துக்கொண்டே இருப்போம்.

எங்கள் கொள்கைத் தலைவரை அவமதிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அண்ணலை அவமதித்த ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சரை, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Trending News

Latest News

You May Like