பறை இசையுடன் தொடங்கிய த.வெ.க மாநாடு..!
பறை என்பது தொன்னெடுங்காலமாக இருந்து வந்த ஒரு இசைக்கருவி ஆகும். பறை என்பதன் இன்னொரு பொருள் சொல்லுதல், அறிவித்தல் அல்லது பறைசாற்றல் எனவும் பொருள்படும். பண்டைய காலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பறை இசைக்கருவிகள் நம்மவர் வாழ்வியலோடு பின்னிப்பிணைந்திருக்கின்றன. ஐவகை நிலங்களுக்கும் ஐவகையான பறை இசைக் கருவிகள் இருந்திருக்கின்றன. போர் புரிவதற்கு முன்னால் அறிவிக்கவும், வேறு பல அரசு அறிவித்தல்களையும், வெற்றி வாகை சூடுவதையும் பறை கொண்டே அறிவித்து வந்துள்ளனர்.
மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள தவெக மாநாடு விக்கிரவாண்டியில் தொடங்கியது. பறை இசையுடன் தொடங்கிய த.வெ.க மாநாடு..லட்சக்கணக்கான தொண்டர்கள், பொதுமக்கள் மாநாட்டில் குழுமியிருக்கும் நிலையில், தமிழர்களின் ஆதி இசையான "பறை" இசையுடன் தொடங்கியது த.வெ.க மாநாடு.!
தொண்டர்கள் அனைவரும் உற்சாக கோஷமிட்டு வருகின்றனர். இன்னும் சற்றுநேரத்தில் தலைவர் விஜய் மாநாடு மேடைக்கு வருகை தர உள்ளார். மாநாடு தொடங்குவதற்கு முன்னர் தொண்டர்களிடம் அமைதி காக்குமாறு பொதுச்செயலாளர் ஆனந்த் வேண்டுகோள் விடுத்தார்.
.png)