”எனக்கு இருக்கும் வியாதியை குணப்படுத்தவே முடியாது” மனம் திறந்த டிடி..!!

சினிமாவில் நடிகையாக அறிமுகமான திவ்யதர்ஷினி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் பிரபலமானார். படங்களில், சீரியல்களை நடிப்பதைவிடவும் அவர் டிவி தொகுப்பாளினியாக உச்சத்துக்கு சென்றார்.
ஆனால் சமீப காலமாக அவர் எந்தவிதமான டிவி நிகழ்ச்சியிலும் பங்கேற்கவில்லை. எனினும் படங்களில் நடிப்பதை அதிகரித்துக் கொண்டுள்ளார். அவரை வைத்து சமீபத்தில் யூ ட்யூப் சேனல் ஒரு டாக் ஷோவை நடத்தியது.
அதில் தனது தனிப்பட்ட விஷயங்கள் குறித்து மனம் திறந்து பேசினார். அத்துடன் தனக்கு ஏற்பட்டுள்ள நோய் பாதிப்புகளை குறித்து மிகவும் உணர்ச்சிவசப்பட்டு அவர் பேசியுள்ளார்.
எனக்கு ஆர்த்தரைட்டிஸ் பிரச்னை ஏற்பட்டுள்ளது. அதனால் 2 நிமிடங்களுக்கு மேல் என்னால் நிற்க முடியாது. விஜய் டிவியில் நிற்காமல் எந்த ஷோவும் கிடையாது. அதனால் நான் வாய்ப்புக் கேட்டும் இல்லை என்று கூறிவிட்டனர். என்னை பயன்படுத்திவிட்டு ஒதுக்கிவிட்டவர்கள் தான் பலர், அது எல்லாமே எனக்கு ஒரு பாடம் தான் என்று மிகவும் வேதனையுடன் பேசியுள்ளார் டி.டி.