1. Home
  2. தமிழ்நாடு

அரசியலில் திருப்பம்..! தமிழகத்தில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி போட்டியிடும் - ரங்கசாமி..!

Q

கடந்த 2021 தமிழ்நாடு சட்டசபை தேர்தலில், திமுக தனிப்பெரும்பான்மையுடன் 133 தொகுதிகளை வென்றது, அதேசமயம் திமுக கூட்டணி மொத்தம் 159 தொகுதிகளில் வெற்றி கண்டது. பாஜக - அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணி 75 தொகுதிகளை கைப்பற்றியது.

 

அதில் அதிமுக 65 தொகுதிகளை வென்றது. பாஜக 4 இடங்களை வென்றது.

அதிமுக கூட்டணியில், பாமக, பாஜக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன. இதில் பாமகவுக்கு 23 தொகுதிகளும் பாஜகவுக்கு 20 தொகுதி களும் தமாகாவுக்கு 6 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டிருந்தன.

இதில் 23 தொகுதிகளில் போட்டியிட்ட பா.ம.க,  5 தொகுதிகளில் வென்றது. 

மற்ற கட்சிகள், கூட்டணிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் எந்த இடமும் பெறவில்லை. திமுக தனிப்பட்ட வகையில் 37.70 சதவிகித வாக்குகளை வென்றது. அதிமுக 33.29 சதவிகித வாக்குகளை வென்றது. காங்கிரஸ் 4.27 சதவிகித வாக்குகளை வென்றது. நாம் தமிழர் 6.58 சதவிகித வாக்குகளை வென்றது.

 

 தமிழ்நாட்டில் அதிமுக - திமுகவுடன் கூட்டணி இல்லை என்று விஜய் கூறிய நிலையில்.. அதிமுகவிற்கு இணையாக தமிழக வெற்றிக் கழகம் வாக்குகளை வெல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் அகில இந்திய என்.ஆர் காங்கிரஸ் தமிழகத்தில் போட்டியிடும்: புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார் .

Trending News

Latest News

You May Like