டிடிவி தினகரன் பின்னடைவு!

மக்களவை தேர்தல் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டு வரும் நிலையில், கடந்த மக்களை தேர்தல்களை போல் தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறது. அந்த வகையில் தேனி தொகுதியில் திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் அமமுக வேட்பாளர் டிடிவி தினகரனை விட முன்னிலை பெற்றுள்ளார்.
காலை 9.14 மணி நிலவரப்படி தேனி தொகுதியில் திமுக வேட்பாளரான தங்க தமிழ்ச்செல்வன் முன்னிலை வகிக்கிறார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அமமுகவின் டிடிவி தினகரன் மற்றும் அதிமுகவின் நாராயணசாமி பின்னடைவை சந்தித்துள்ளனர்.
தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வரும் நிலையில், முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில் தங்க தமிழ் தமிழ் செல்வன் 23820 வாக்குகள் பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட டிடிவி தினகரன் 13525 பெற்று 3-வது இடத்தை பிடித்துள்ளார்.
இந்த தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் 13576 வாக்குகள் பெற்று 2-வது இடத்தை பிடித்துள்ளார்.