1. Home
  2. தமிழ்நாடு

டிடிவி தினகரன் ஹேப்பி அண்ணாச்சி...! அமமுகவுக்கு மீண்டும் குக்கர் சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்!

1

நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக அங்கம் வகிக்கிறது. இந்தநிலையில், அமமுகவுக்கு பாஜக இரண்டு தொகுதிகளை ஒதுக்கியுள்ளது. 

தொகுதி உடன்பாட்டிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், “அ.ம.மு.க. போட்டியிடும் இரண்டு தொகுதிகள் எவை என்பது தொடர்பாக பின்னர் முடிவெடுக்கப்படும். நாங்கள் கேட்ட தொகுதிகள் எங்களுக்கு தரப்பட்டுள்ளது. என்னென்ன தொகுதிகள் என்பதை பா.ஜ.க. தலைமை தான் அறிவிக்கும். எந்தெந்த தொகுதிகள் என்பதை பாஜக அறிவித்தவுடன், அமமுகவுக்கான தேர்தல் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள். அமமுகவுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை வைத்துள்ளோம் என்று தெரிவித்திருந்தார்.குக்கர் சின்னத்தில் டிடிவி தினகரன் சென்னை ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.அதன்பிறகு அவரது கட்சி சந்திக்கும் தேர்தலில் குக்கர் சின்னத்தை கேட்டு வாங்கி பயன்படுத்தி வருகிறார். அந்த வகையில் வரும் லோக்சபா தேர்தலிலும் அவர் குக்கர் சின்னத்தை கேட்டு விண்ணப்பம் செய்திருந்தார்.

இந்நிலையில், அமமுகவிற்கு தேர்தல் ஆணையம் குக்கர் சின்னத்தை ஒதுக்கியுள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது டிடிவி தினகரன் குக்கர் சின்னம் கேட்ட நிலையில், தேர்தல் ஆணையம் ஒதுக்கவில்லை. இதனையடுத்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த டிடிவி தினகரனுக்கு பரிசுப் பெட்டி சின்னம் வழங்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் இன்றைய தினம் அமமுக போட்டியிடும் 2 தொகுதிகளின் பெயர்களையும் பாஜக வெளியிடும் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன. டிடிவி தினகரன் தேனியில் போட்டியிட ஆர்வமாக உள்ளதாக கூறப்படுகிறது.

Trending News

Latest News

You May Like