1. Home
  2. தமிழ்நாடு

பழனிசாமியிடம் இருப்பதால் இரட்டை இலை தோல்வி சின்னம் – டிடிவி தினகரன் !

1

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், வாகன பிரசாரத்தில் ஈடுபட்டார்.அப்போது பேசிய அவர்,

“3வது முறையாக மோடி பிரதமராக வரவேண்டும். உலக நாடுகள் வியந்து பாராட்டும் அளவிற்கு இந்தியாவை முன்னேற்றிய பிரதமர் மோடிதான் நமது பிரதமர் வேட்பாளர். திமுக கூட்டணியில் யார் பிரதமர் வேட்பாளர் என தெரியவில்லை. இந்தியா கூட்டணி தலை இல்லாத உடல் போல உள்ளது. நமக்கு சிங்கம் போல மோடி உள்ளார்.

தமிழ்நாட்டில் தேர்தல் வாக்குதியை நிறைவேற்ற முடியாத அரசாக 3 ஆண்டுகளாக திமுக ஆட்சி உள்ளது. மறுபக்கம் இரட்டை இலையை வைத்துக் கொண்டு பழனிசாமி ஏமாற்றி வருகிறார். துரோகத்தின் மூலமே அதிமுகவை பழனிசாமி கைப்பற்றியுள்ளார். எம்ஜிஆர், ஜெயலலிதாவிடம் இருந்தபோது இரட்டை இலை வெற்றி சின்னமாக இருந்தது. ஆனால் இப்போது பழனிசாமியிடம் இருப்பதால் இரட்டை இலை தோல்வி சின்னம்.

10 ஆண்டுகளாக நடந்த சிறந்த ஆட்சியினால் தீவிரவாதிகள் இந்தியா பக்கம் தலைவைத்து கூட பார்க்கவில்லை. அண்டை நாடுகள் இந்தியாவிடம் வாலாட்டுவது கிடையாது. பிரதமர் மோடியால், உலக நாடுகள் இந்தியாவை தலை நிமிர்ந்து பார்க்கிறார்கள். பிரதமர் மோடி 3 வது முறையாக ஆட்சிக்கு வந்தால் இந்தியா வல்லரசாகும்” என்று பேசினார். அவருடன் விருதுநகர் பாஜக வேட்பாளர் ராதிகா இருந்தார்.

Trending News

Latest News

You May Like