1. Home
  2. தமிழ்நாடு

அரசியலில் பரபரப்பு : இபிஎஸ்-ஐ மாற்றினால் தான் என்.டி.ஏ கூட்டணிக்குள் வருவோம் - டி.டி.வி தினகரன்..!

1

தமிழகத்தில் மீண்டும் பா.ஜ.க அ.தி.மு.க கூட்டணி உறுதி செய்யப்பட்ட நிலையில், முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்டார். அதேபோல், பா.ஜ.க.வின் தலைவராக இருந்த அண்ணாமலை மாற்றம் செய்யப்பட்து நயினார் நாகேந்திரன் புதிய தலைவராக பொறுப்பேற்றர்.

அ.தி.மு.க – பா.ஜ.க. இணைந்தவுடன், என்.டி.ஏ கூட்டணியில் இருந்து ஒ.பன்னீர்செல்வம் விலகிய நிலையில், சமீபத்தில் டி.டி.வி தினகரன் என்.டி.ஏ. கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார், இதனால் பரபரப்பு அதிகமான நிலையில், பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் எடப்பாடி பழனிச்சாமிக்கு முக்கியத்தும் கொடுத்ததால் தான் கூட்டணியில் இருந்து வெளியேறியதாக டி.டி.வி கூறியிருந்தார். ஒ.பி.எஸ்., டி.டி.வி இருவரும் மீண்டும் என்.டி.ஏ கூட்டணியில் இணைய வேண்டும் என்று முன்னாள் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார்.

இதனிடையே, முதல்வர் வேட்பாளராக உள்ள எடப்பாடி பழனிச்சாமியை மாற்றினால் தான் மீண்டும் என்.டி.ஏ கூட்டணிக்குள் வருவோம் என்று டி.டி.வி தினகரன் கூறியுள்ளார். விருதுநகரில் செய்தியாளர்களிடம் பேசிய டி.டி.வி தினகரன், என்.டி.ஏ கூட்டணியின் முதல்வர் வேட்பாளரை மாற்றினால், மீண்டும் கூட்டணியில் இணையத் தயார். அதிமுகவை ஒருங்கிணைக்க அமித்ஷாவை சந்தித்த செங்கோட்டையனின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.அதேபோல் அமைதிப் பூங்காவாக உள்ள தென் தமிழ்நாட்டின் அமைதியை சீர் குலைக்க எடப்பாடி பழனிசாமி முயற்சிக்கிறார்.

அ.தி.மு.க இணைப்புக்கு சமரசம் பேசுவதாக கூறி இருக்கும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எப்போது வேண்டுமானாலும் தன்னை தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார். இதனிடையே, டி.டி.வி வைத்துள்ள இந்த திடீர் நிபந்தனை தமிழக அரசியலில் பெரும் பாரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending News

Latest News

You May Like