1. Home
  2. தமிழ்நாடு

டி.டி.எப்.வாசன் குழுவினர் சேட்டை திருப்பதி தேவஸ்தானம் நடவடிக்கை..!

Q

தொடர்ந்து சர்ச்சைக்கு உண்டாக பதிவுகளை போட்டு பிரபலம் ஆவதை வழக்கமாக கொண்டுள்ள டிடிஎஃப் வாசன். தற்போது புது சர்ச்சை ஒன்றில் சிக்கியுள்ளார்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனத்திற்காக நாராயணகிரி பூங்காவில் அமைக்கப்பட்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்த நிலையில் டிடிஎஃப் வாசன் மற்றும் அவரது நண்பர்கள் தரிசனத்திற்காக கதவுகளை திறப்பது போன்று அருகில் சென்று பின்னர் ஏமாற்றி வரும் வீடியோவை பதிவு செய்து அந்த வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் டிடிஎஃப் வாசன் பதிவிட்டார். இந்த வீடியோ வெளியிட்ட டிடிஎஃப் வாசனுக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன. 

இந்த வீடியோ வைரலாக பரவிய நிலையில் பக்தர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் இது குறித்து விசாரணை நடத்தி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க விஜிலென்ஸ் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர்.


 


 

Trending News

Latest News

You May Like