1. Home
  2. தமிழ்நாடு

ஹீரோவாக டிடிஎஃப் வாசன் நடிக்கும் 2வது படம்..!

1

சில மாதங்களுக்கு முன்னர் சென்னை - பெங்களூரு சாலையில் பைக்கில் செல்லும் போது வீலிங் செய்ததாக டிடிஎஃப் வாசன் கைது செய்யப்பட்டார் என்பதும் அதன் பிறகு அவர் ஜாமீனில் வெளியே வந்தார் என்பதும் தெரிந்தது. அதன் பிறகு சமீபத்தில் அவர் கார் ஓட்டும் போது போன் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து மீண்டும் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளிவந்துள்ளார்.

இந்த நிலையில் அவர் ஏற்கனவே ’மஞ்சள் வீரன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். தற்போது டிடிஎஃப் வாசன் நடிக்கும் அடுத்த திரைப்படம் ’ஐபிஎல்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டு டைட்டில் போஸ்டரும் வெளியாகி உள்ளது. கிஷோர் மற்றும் டிடிஎஃப் வாசன் இணைந்து நடிக்கும் இந்த படத்தில் ’விருமாண்டி’ அபிராமி உள்பட பலர் நடிக்க உள்ளனர். பிரபல நடிகர் ஆர்யா இந்த படத்தின் டைட்டில்லுக் போஸ்டரை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

ஐபிஎல் (IPL) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் பிரபல நடிகர் கிஷார், நடிகை அபிராமி ஆகியோருடன் டிடிஎஃப் வாசன் இணைந்து நடிக்கவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது, மேலும், இந்தப் படத்தினை இயக்குநர் கருணாகரன் இயக்குவதாகவும், ராதா ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்ப்தாகவும், அஸ்வின் விநாயகமூர்த்தி இப்படத்துக்கு இசையமைப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


 

Trending News

Latest News

You May Like