1. Home
  2. தமிழ்நாடு

டி.டி.எப். வாசன் கைது !

Qp

பிரபல யூடியூபர் டி.டி.எஃப். வாசனை மதுரையில் போலீஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த 15 ஆம் தேதி சென்னையிலிருந்து திருச்செந்தூர் நோக்கி காரில் சென்றுள்ளார் யூடியூபர் டி.டி.எஃப். வாசன். மதுரை வண்டியூர் டோல்கேட் பகுதியில் சென்றபோது அஜாக்கிரதையாகவும், பொது மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் விதமாகவும் செல்போனில் பேசிக்கொண்டே காரை ஓட்டியுள்ளார். அதனை வீடியோவாக Twin Throttlers என்ற தனது YOUTUBE சேனலில் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து மதுரை மாநகர சமூக ஊடகப்பிரிவு கண்காணிப்பு அலுவலர் மணிபாரதி என்பவர் அளித்த புகாரின் கீழ் அண்ணாநகர் காவல் நிலையத்தில் டி.டி.எஃப். வாசன் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்தநிலையில், டி.டி.எஃப். வாசனை கைது செய்த மதுரை அண்ணாநகர் போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே காஞ்சிபுரத்தில் அதிவேகமாக பைக் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய விவகாரத்தில் டி.டி.எஃப். வாசனின் இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமத்திற்கு 10 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து கார் ஒட்டுவதற்கான எல்எல்ஆர் விண்ணப்பத்தை பெற்று அதன் மூலம், டி.டி.எஃப். வாசன் கார் ஓட்டி வந்த நிலையில், அதிலும் போக்குவரத்து விதிகளையும், மோட்டார் வாகன சட்ட விதிகளையும் மீறியதாக கைது செய்யப்பட்டுள்ளார்

Trending News

Latest News

You May Like