அமெரிக்க கடல் பகுதியில் சுனாமி எச்சரிக்கை.. பீதியில் மக்கள் ஓட்டம் !

அமெரிக்க கடல் பகுதியில் சுனாமி எச்சரிக்கை.. பீதியில் மக்கள் ஓட்டம் !

அமெரிக்க கடல் பகுதியில் சுனாமி எச்சரிக்கை.. பீதியில் மக்கள் ஓட்டம் !
X

அமெரிக்காவின் அலஸ்கா மாகாணத்தில் தென்கிழக்கு பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவானது.

இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அலஸ்கா கடற்கரை பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. பேரலைகள் ஏற்படும் எனவும் மக்கள் கடற்கரை பகுதிகளுக்கு செல்லக் கூடாது என்றும் அமெரிக்க அரசு நிர்வாகம் அறிவுறுத்தியது.

இதனால் அமெரிக்காவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே அங்கு கொரோனாவால் மக்கள் கொத்து கொத்தாக மடிந்த நிலையில் சுனாமி எச்சரிக்கை மேலும் அவர்களை பீதியடைச் செய்துள்ளது.

அமெரிக்காவில் மக்கள் அடர்த்தி மிகுந்த மாகாணங்களில் ஒன்றான அலஸ்கா தீபகற்பத்தில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுபோன்ற தகவல்களால் கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி ஏற்பட்ட சுனாமி ஒருகணம் கண்முன்னே வந்து செல்கிறது. இதுவே சுனாமி என்ற அறிவிப்பு வந்ததும் மக்கள் அச்சப்படுவதற்கு காரணம்.

சுனாமி என்ற அந்த ஆழிப்பேரலை ஏற்படுத்திய அச்சம் இன்னமும் என் மனதில் ஆழமாக பதிந்துள்ளது என்றே சொல்லலாம்.

newstm.in

Next Story
Share it