1. Home
  2. தமிழ்நாடு

30 ஆண்டு வீட்டு கடனை 8 ஆண்டுகள் குறைக்க இதை செஞ்சி பாருங்க..!

1

ப்ரீபேமெண்ட் செலுத்தலாம்?: ப்ரீபேமெண்ட் செலுத்த பல்வேறு ஆப்ஷன்கள் உள்ளன. அவை என்னன்ன என்பது குறித்து பார்ப்போம்.

மொத்த தொகை: உங்கள் கடனின் அசலை குறைக்க ஒரே நேரத்தில் மொத்தத் தொகையாக வரவு வைக்கலாம்.

பிரித்து பிரித்து செலுத்துதல்: ஆண்டுக்கு ஒரு முறை அல்லது அரையாண்டுக்கு ஒரு முறை என பிரித்து பிரித்து தொகையை அவ்வப்போது வரவு வைக்கலாம்.

கூடுதல் EMI-கள்: உங்கள் கடனின் இருப்பை விரைவாக குறைக்க ஒவ்வொரு ஆண்டும் 2 அல்லது 3 கூடுதல் EMI-களை செலுத்தலாம். அதிகரித்த EMI தொகை: ஒவ்வொரு ஆண்டும் அதிக EMI தொகையை தேர்ந்தெடுப்பது தவணைக்காலம் மற்றும் வட்டி ஆகியவற்றை குறைக்க உதவும்.

நீங்கள் 30 ஆண்டுகளுக்கு 9.5% வட்டி விகிதத்தில் 85 லட்ச ரூபாய் லோன் வாங்கி இருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். இதற்கு மாதம் மாதம் EMI-யாக 71,473 ரூபாய் செலுத்துகிறீர்கள் என்றால் 30 வருட கால முடிவில் வட்டியாக 1,72,30,139 ரூபாய் செலுத்தி இருப்பீர்கள். அதுவே பிரீ பேமென்ட் ஆப்ஷன் பயன்படுத்தினால் வட்டி தொகையை வெகுவாகக் குறைக்க முடியும்.

பிரீ பேமென்ட் ஆப்ஷனை பயன்படுத்தினால் 58,75,158 ரூபாய் வரை வட்டி சேமிக்க முடியும். அதோடு உங்களுடைய 30 ஆண்டுகால கடன் செலுத்தும் வரம்பு 7 ஆண்டுகள் 10 மாதமாக குறைக்கலாம். அதாவது பிரீ பேமெண்ட் ஆப்ஷனை பயன்படுத்தி வருடத்திற்கு 10 சதவீதம்.. ரூ. 85 லட்சத்தில் 10%, 8.5 லட்சத்தை மூன்று தவணைகளாக ஒவ்வொரு வருடமும் செலுத்தி வர இஎம்ஐ தொகை ரூ.64,109 ரூபாயாக குறையும். இதனால் வட்டியையும் சேமித்து உங்களுடைய கடன் காலத்தையும் தோராயமாக 8 ஆண்டுகள் வரை குறைக்க முடியும்.

Trending News

Latest News

You May Like