1. Home
  2. தமிழ்நாடு

பீகாரில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு..! ஜெயிக்கப்போவது யார் ?

Q

பீகாரில் ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவர் நிதிஷ்குமார், லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் இணைந்து கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தி வந்தார்.
இந்த நிலையில், கடந்த 28ம் தேதி ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியுடன் கூட்டணியை முறித்துக் கொண்டு, பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து 9வது முறையாக முதலமைச்சர் பதவியேற்றார். மக்களவைத் தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், நிதிஷ்குமாரின் நடவடிக்கை பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், பீகாரில் இன்று நிதிஷ்குமார் அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. நிதிஷ்குமார் அரசு தங்களுக்கு 128 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதாக தெரிவித்துள்ளனர். பீகார் மாநிலத்தில் மொத்தம் 243 உறுப்பினர்கள் உள்ளனர். ஆட்சியை பிடிப்பதற்கு அங்கு 128 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு வேண்டும்.

Trending News

Latest News

You May Like