1. Home
  2. தமிழ்நாடு

இன்று 47-வது அதிபராக டிரம்ப் பதவியேற்பு..! பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் முகேஷ் அம்பானி!

1

இன்று அமெரிக்காவின் 47-வது அதிபராக பதவியேற்க உள்ளார் டிரம்ப். டிரம்ப் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

இந்த விழாவில் கலந்துகொள்ள உலக தலைவர்கள் பலருக்கும், பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்தியாவின் பிரபல தொழிலதிபரும், பெரும் கோடீஸ்வரருமான முகேஷ் அம்பானி மற்றும் அவரது மனைவி நீடா அம்பானி ஆகிய இருவரும் டிரம்ப் பதவியேற்பு விழாவில் பங்கேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்காக அவர்கள் இருவரும் நேற்று அமெரிக்கா புறப்பட்டு சென்றதாக கூறப்படுகிறது.

டிரம்பின் புதிய அரசில் மந்திரிகளாக பதவியேற்க உள்ளவர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகள் உள்பட முக்கிய விருந்தினர்கள் அமரும் மேடையில் முகேஷ் அம்பானி மற்றும் நீடா அம்பானிக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

பதவியேற்பு விழாவுக்கு முன்பாக துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜே.டி. வான்ஸ் அளிக்கும் இரவு விருந்தில் முகேஷ் அம்பானியும், நீடா அம்பானியும் பங்கேற்பார்கள் என தெரிகிறது. ஜனாதிபதி பதவியேற்பு விழா வழக்கமாக அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு அருகே பொதுவெளியில் நடத்தப்படும் நிலையில், இந்த முறை கடும் குளிர் காரணமாக நாடாளுமன்றத்துக்குள் நடத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like