1. Home
  2. தமிழ்நாடு

ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு டிரம்ப் எச்சரிக்கை... இரண்டே நிமிடங்களில் நூடுல்ஸ் ஆக்கிவிடுவோம்..!!

Q

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் காசாவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு இடையே, இரண்டு ஆண்டுகளாக போர் நடந்து வந்தது.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முயற்சியால், தற்போது தற்காலிகமாக போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது. பல நாடுகளின் தலைவர்கள் முன்னிலையில், அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையில், காசாவில் ஹமாஸ் மற்றும் உள்ளூர் அமைப்பினர் இடையே மோதல் வெடித்தது. போரின் போது, இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறி, எட்டு பேருக்கு ஹமாஸ் தரப்பில் மரண தண்டனை சமீபத்தில் நிறைவேற்றப்பட்டது. மேலும் அங்கி ருந்த இஸ்ரேல் ராணுவத்தினர் மீது ஹமாஸ் குண்டுகள் வீசியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், வெள்ளை மாளிகையில் நடந்த தீபாவளி கொண்டாட்டத்தில் உரையாற்றிய டிரம்ப், ஹமாஸ் பயங்கரவாதிகளுக் கு எச்சரிக்கை விடுத்தார்.

இது குறித்து அவர் கூறுகையில், அவர்கள் மிகவும் நல்லவர்களாகவும் நேர்மையாகவும் இருப்போம் என்று ஒப்புக் கொண்டார்கள். காசா மக்களை கொல்வதை நிறுத்தாவிட்டால், ஹமாஸ் பயங்கரவாதிகளை அழிப்பதைத் தவிர வேறு வழியில்லை. ஹமாஸ் அமைப்பினர் சரியானதை செய்வார்கள் என்ற நம்பிக்கை இன்னும் உள்ளது.

அமைதி ஒப்பந்தத்தை மீறினால் அல்லது மோசமாக நடந்து கொண்டால், இரண்டே நிமிடங்களில் அவர்களை முடித்துவிடுவோம், என, குறிப்பிட்டார்.

Trending News

Latest News

You May Like