3-ம் உலகப் போர் நிகழாமல் தடுப்பேன் - டிரம்ப்!

கேப்பிடல் ஒன் அரங்கில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றினார் டிரம்ப்.
அங்கு டிரம்ப் பேசியதாவது,
நமது நாட்டைச் சரியான பாதையில் கட்டமைக்க வேண்டும். நாளைச் சூரியன் மறையும் நேரத்தில், நமது எல்லைகள்மீதான படையெடுப்பு நிறுத்தப்படும். நமது எல்லைகளைத் தொடர்ந்து பாதுகாப்போம். அனைத்து சட்டவிரோத எல்லை அத்துமீறல்களுக்கும் முற்றுப்புள்ளி வைப்பேன்.
அமெரிக்க மண்ணில் செயல்படும் ஒவ்வொரு சட்டவிரோத அன்னிய கும்பல் மற்றும் புலம்பெயர்ந்த குற்றவாளிகளையும் வெளியேற்றுவோம்.
மத்திய கிழக்கில் அமைதிக்கான முதல் படியாக நாம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை அடைந்துள்ளோம். கடந்த நவம்பரில் நாங்கள் பெற்ற வரலாற்று சிறப்புமிக்க வெற்றியின் விளைவாகவே இந்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
தற்போது 3 பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டு உள்ளனர். நான் அதிபராக இருந்திருந்தால் இந்தக் காசா போரே நடந்திருக்காது.
நமது நிர்வாகம் மத்திய கிழக்கில் மூன்று மாதங்களுக்குள் இவை அனைத்தையும் சாதித்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளில், ஜோ பைடன் அதிபராக இருந்து சாதித்ததை விட, அதிகாரத்தில் இல்லாமலேயே கடந்த 3 மாதத்தில் நாங்கள் அதிகமாகச் சாதித்துள்ளோம்.
உக்ரைனில் நடைபெற்று வரும் போரையும் விரைவில் முடிவுக்குக் கொண்டு வருவேன். மத்திய கிழக்கில் நீடிக்கும் குழப்பத்தைத் தீர்த்து வைப்பேன். 3-ம் உலகப் போர் நிகழாமல் தடுப்பேன் என்று பேசியுள்ளார்.