1. Home
  2. தமிழ்நாடு

உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப்..! விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு..!

1

அதிபர் டிரம்ப் கொண்டு வந்த 'பிக் பியூட்டிஃபுல் பில்' (Big Beautiful Bill) மசோதா கடந்த 4-ந்தேதி சட்டமானது. இந்த சட்டத்தின்கீழ் குடியேற்றம் அல்லாத விசாக்களுக்கு 250 டாலர் புதிய விசா கட்டணத்தை டிரம்ப் அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த புதிய கட்டணம், ஏற்கனவே உள்ள விசா செலவுகளுடன் கூடுதலாக வசூலிக்கப்படும். மேலும் இது திரும்பப் பெற முடியாத கட்டணமாகும். இது 2026-ம் ஆண்டு முதல் அமலுக்கு வருகிறது.

இந்தக் கட்டணம் B-1/B-2 (சுற்றுலா மற்றும் வணிக விசாக்கள்), F மற்றும் M (மாணவர் விசாக்கள்), H-1B (வேலை விசாக்கள்) மற்றும் J (பார்வையாளர் விசாக்கள்) ஆகியவற்றுக்கு பொருந்தும். A மற்றும் G பிரிவுகளில் உள்ள விசாக்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தற்போது, அமெரிக்க B-1/B-2 விசாவுக்கு 185 டாலர் செலவாகிறது. புதிய கட்டணம் அமலுக்கு வந்தால் மற்ற செலவுகளுடன் சேர்ந்து மொத்த செலவு சுமார் 472 டாலராக ஆக உயரும். இது தற்போதைய விசா செலவை விட 2.5 மடங்கு அதிகமாகும்.

இதன் காரணமாக இந்தியர்கள் உட்பட அமெரிக்காவுக்குச் செல்லும் மாணவர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் வணிகப் பயணிகள் அனைவரும் இந்தக் கூடுதல் கட்டணத்தால் பாதிக்கப்படுவார்கள்.

Trending News

Latest News

You May Like