ட்ரம்ப் மரணத்திற்கு சமம் !! திடீரென நடந்த ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு.

ட்ரம்ப் மரணத்திற்கு சமம் !! திடீரென நடந்த ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு.

ட்ரம்ப் மரணத்திற்கு சமம் !! திடீரென நடந்த ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு.
X

கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் வல்லரசு நாடான அமெரிக்காவையும் விட்டுவைக்கவில்லை. நாளுக்கு நாள் மிகப்பெரிய பாதிப்பு அமெரிக்காவில் ஏற்படுகிறது.

அமெரிக்காவில் இதுவரை 7 லட்சம் பேருக்கும் மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 40 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. ஊரடங்கு இருப்பதால் வர்த்தம் மிகப் பெரிய இழப்பை சந்தித்து வருகிறது. இந்நிலையில் , அமெரிக்காவில் சிறிது சிறிதாக இன்னும் சில நாட்களில் ஊரடங்கு தளர்த்தப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் , ஊரடங்கை தளர்த்த கூடாது என்று , எதிர்ப்பு தெரிவித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சடலங்கள் போன்ற உருவ பொம்மைகளை எடுத்து வந்தும் , ட்ரம்ப் = மரணம் என்ற பதாகைகளை ஏந்தியும் ஆர்ப்பாட்டக்காரர்கள் அமெரிக்காவில் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊரடங்கு இருக்கு காலத்தில் சில பொதுமக்கள் டிரம்ப்க்கு எதிராக போராட்டம் நடத்தியது பெரும் அதிர்ச்சியையும் , பரபரப்பையும் ஏற்படுத்தியது.

Newstm.in

Next Story
Share it