1. Home
  2. தமிழ்நாடு

மகுடம் சூடும் டிரம்ப்! துணை அதிபராகும் ஜேடி வான்ஸ்..!

1

டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்கும் விழா வாஷிங்டன் டிசியில் உள்ள கேபிடல் கட்டிடத்தில் நடைபெறும். இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு இன்று நிகழ்வு தொடங்கும். இதே விழாவில் துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸும் பதவியேற்பார். முக்கிய உலக வல்லரசுகளுக்கும் இந்தியா உட்பட அமெரிக்காவின் முக்கிய நட்பு நாடுகளுக்கும் அழைப்புகள் சென்றுள்ளன. இந்திய அரசுக்கு முறையாக அழைப்பு சென்றுள்ளது. மாறாக இந்திய பிரதமர் மோடிக்கு தனிப்பட்ட அழைப்பு போகவில்லை என்று கூறப்படுகிறது.

வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ் ஜெய்சங்கர், இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் இந்தியா சார்பில் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பயணத்தின் போது, ​​அமெரிக்க நிர்வாகத்தின் புதிய பிரதிநிதிகளுடனும், புதிய அமைச்சர்களுடனும் ஜெய்சங்கர் சந்திப்பு நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொழிலதிபர்கள் எலான் மஸ்க், சுந்தர் பிச்சை, மார்க் ஜூக்கர்பெர்க் உள்ளிட்டோரும் பதவியேற்பு விழா நடைபெறும் கேபிடல் ரோட்டுண்டா அரங்கிற்கு வந்தடைந்தனர்.இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ் ஜெய்சங்கர் கலந்து கொண்டார்.

 


 

Trending News

Latest News

You May Like