1. Home
  2. தமிழ்நாடு

பிரதமர் மோடிக்கு தொலைபேசியில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார் டிரம்ப்..!

1

பிரதமர் மோடி இன்று (செப்.17) 75வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதையடுத்து மோடிக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலை பேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்தார். வாழ்த்து தெரிவித்த டிரம்ப்பிற்கு மோடி தனது எக்ஸ் தளத்தில் கூறியது, எனக்கு வாழ்த்து தெரிவித்த நண்பர் டிரம்ப்பிற்கு நன்றி 'இந்தியா-அமெரிக்க நட்புறவை உலகளவிற்கு எடுத்துச் செல்வோம். இவ்வாறு அதில் மோடி தெரிவித்தார்.

வரி விவகாரத்தில் கடந்த சில மாதங்களாக இந்தியா அமெரிக்க இடையே எதிர்மறை கருத்துக்கள் எழுந்தன. 'நான் எப்போதுமே மோடியுடன் நண்பராக இருப்பேன்' எனக் கூறினார் டிரம்ப். இதற்கு, டிரம்பின் உணர்வுகளை பாராட்டுவ தாக பிரதமர் மோடி பதில் அளித்தார்.

இந்த சூழ்நிலையில், பிரதமர் மோடிக்கு முதல் நபராக பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் டிரம்ப் .


 

Trending News

Latest News

You May Like