கோல்டு கார்டு திட்டம் அமல் - அதிபர் டிரம்ப் அறிவிப்பு..!

அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற பிறகு, கோல்டு கார்டு எனும் திட்டத்தை டிரம்ப் அறிவித்தார். அதாவது, ரூ.41.50 கோடியை அமெரிக்க அரசுக்கு செலுத்தும் வெளிநாட்டவர்கள் இந்த கோல்டு கார்டை பெறலாம். இதன்மூலம், அவர்கள் அமெரிக்க குடியுரிமையை பெற முடியும் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில், கோல்ட் கார்டு பெறும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.இது குறித்து தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் கூறியிருப்பதாவது; ரூ.41.50 கோடி செலுத்தும் வெளிநாட்டவர்கள் டிரம்ப் கார்டு (கோல்டு கார்டு) பெறமுடியும். இது கிரீன் கார்டை போன்றது. மிகவும் பயனுள்ளது. உலகின் மிகச்சிறந்த நாடு மற்றும் மிகப்பெரிய சந்தையில் நுழைவதற்கு பதிவு செய்வது எப்படி? என்று கேட்டு ஆயிரக்கணக்கானோர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருகிறார்கள். இந்த கோல்ட் கார்டு அமெரிக்க குடியுரிமையை உறுதியளிக்காது. மாறாக உலகின் மிகச் சிறந்த நாட்டில் வர்த்தகம் செய்யலாம். எனவே, இந்த விவகாரத்தில் காங்கிரஸின் ஒப்புதலை பெற தேவையில்லை, எனக் குறிப்பிட்டிருந்தார்.
அண்மையில் இது குறித்து அமெரிக்க வணிக செயலாளர் ஹோவார்ட் லுட்னிக் கூறியதாவது: ரூ.41.50 செலுத்தி அமெரிக்க பொருளாதாரத்தில் பங்கேற்க விரும்பும் இந்தியர்களிடையே பெரும் வரவேற்பைப் பெறும், என்றார்.