சிம்ரன் தோழியாக நடித்த த்ரிஷா… அப்போது அவர் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

சிம்ரன் தோழியாக நடித்த த்ரிஷா… அப்போது அவர் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

சிம்ரன் தோழியாக நடித்த த்ரிஷா… அப்போது அவர் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
X

தமிழ் சினிமாவில் நீண்ட வருடங்கள் ஹீரோயினாக நடித்துவரும் நடிகை த்ரிஷா 37 வயதிலும் இளமை மாறாமல் அப்படியே இருக்கிறார். அதனால் அவருக்கான ரசிகர் பட்டாளம் இதுவரை குறையவில்லை.

ஆனால் இந்த இடத்திற்கு அவர் எளிதாக வரவில்லை. துணை நடிகையாக கரியரை தொடங்கி இந்த அளவுக்கு உயர்ந்துள்ளார் அவர். தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வலம் வருகிறார்.

இப்போது கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் த்ரிஷாவின் முதல் சம்பளத்தை கேட்டால் ஆச்சர்யப்படுவீர்கள். த்ரிஷா பிரசாந்த், சிம்ரன் நடித்திருந்த ஜோடி படத்தில் துணை நடிகையாக நடித்திருந்தார்.

அந்த படத்திற்காக அவர் பெற்ற சம்பளம் வெறும் 500 ரூபாய். மனம் தளராத த்ரிஷா தொடர் முயற்சியினால், அடுத்த சில வருடங்களிலேயேமௌனம் பேசியதேஎன்ற படத்தில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

அதன்பிறகு தனது நடிப்பு திறமையால் முன்னணி நடிகர்களுடன் நடிக்கும வாய்ப்பை பெற்று ரஜினி, கமல், அஜித், விஜய் படங்களில் நடித்துள்ளார் த்ரிஷா. அவருடைய தொடக்ககால சம்பளத்தை அறிந்த ரசிகர்கள் சமூக வலை தளங்களில் த்ரிஷாவை புகழ்ந்து தள்ளுகின்றனர்.

newstm.in

Next Story
Share it