1. Home
  2. தமிழ்நாடு

ரோகினி திரையரங்கில் ரசிகர்களுடன் லியோ திரைப்படத்தை பார்த்த திரிஷா..!

1

தமிழ்நாடு முழுவதும் நடிகர் விஜய்யின் லியோ திரைப்படம் வெளியாகி உள்ளது. கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலும் லியோ திரைப்படம் இன்று காலை வெளியானது. கேரளா மற்றும் கர்நாடகாவில் அதிகாலை 4 மணிக்கு லியோ திரைப்படம் வெளியானது. ஆந்திராவில் அதிகாலை 5 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்டது. லியோ திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில் விஜய் ரசிகர்கள் அதை கொண்டாடி வருகின்றனர். 

trisha

இந்த நிலையில், நடிகை திரிஷா ரசிகர்களுடன் அமர்ந்து லியோ திரைப்படத்தை கண்டுகளித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகினி திரையரங்கில் இன்று லியோ திரைப்பட்டம் திரையிடப்பட்டது. இதனை நடிகர் திரிஷா ரசிகர்களுடன் சேர்ந்து பார்த்தார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றனர். நடிகை திரிஷா இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளது குறிப்பிடதக்கது.

Trending News

Latest News

You May Like