1. Home
  2. தமிழ்நாடு

தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த திருச்சி கடைகளுக்கு சீல்..!

1

திருச்சி கலெக்டர் ஆபீஸ் ரோட்டில் உள்ள கொங்கு பீடா ஸ்டால் மற்றும் திருவெறும்பூர் பகுதியில் உள்ள பாலு ஸ்டோர் ஆகிய இரண்டு கடைகளிலும் தொடர்ந்து தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்து தொடர் அபராதங்கள் செலுத்தியபோதும் தொடர்ந்து விற்பனை செய்ததினால்,உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் R.லால்வேனா அவசர தடையாணை உத்தரவின் படி திருச்சிராப்பள்ளி மாவட்ட நியமன அலுவலர் டாக்டர்.R.ரமேஷ்பாபு தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பாண்டி, திரு.செல்வராஜ், வடிவேல், இப்ராஹிம் மற்றும் சண்முகம் கொண்ட குழுவால் அந்த இரண்டு கடைகளும் சீல் செய்யப்பட்டது.

மேலும், மாவட்ட நியமன அலுவலர் டாக்டர்.R.ரமேஷ்பாபு கூறுகையில்.... திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்து தொடர் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் 2006-ன் படி நடவடிக்கை எடுக்கப்பட்டு அந்த கடை சீல் செய்யப்படும் என்று கூறினார். இந்த நிகழ்வில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதுபோன்று பொதுமக்களும் உணவு சம்பந்தமான கலப்படங்களுக்கும் மற்றும் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட உணவு பொருட்களை தாங்கள் உணவு பொருள் வாங்கும் கடைகளில் கண்டறியப்பட்டால் கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்களுக்கு புகார் தெரிவிக்கலாம் என்று கூறப்படுகிறது.

புகார் எண் : 99 44 95 95 95 / 95 85 95 95 95 மாநில புகார் எண்: 9444042322

Trending News

Latest News

You May Like