1. Home
  2. தமிழ்நாடு

ட்ரெண்டாகும் ஹேஸ்டேக் : "மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் உங்கள் விஜய்" ..!

1

தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சென்னை பனையூரில் நடைபெற்றது. தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி கட்சி சார்பில் வைக்கப்படும் பேனர்களில், "மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் உங்கள் விஜய்" என்ற வாசகம் தவறாமல் இடம்பெற வேண்டுமென முடிவெடுக்கப்பட்டது.

மேலும் மாவட்ட செயலாளர்களுக்கும் இது தொடர்பாக அறிவுரை வழங்கப்பட்டது. அந்த வகையில் இனி மாவட்ட அளவில் நடைபெறும் ஒவ்வொரு தமிழக வெற்றி கழக நிகழ்ச்சிகளிலும் தவறாமல் "மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் உங்கள் விஜய்" என்ற வாசகம் இடம்பெற வேண்டுமென அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதே போல மாவட்ட செயலாளர்களும் தங்களது நிர்வாகத்திற்கு உட்பட்ட பகுதி பொறுப்பாளர்களுக்கு இந்த அறிவுறுத்தலை பாஸ் செய்து வருகின்றனர்.

இந்தச் சூழலில் தான் முதல்வர் வேட்பாளர் விஜய் என்ற ஹேஸ்டேக் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே தமிழக வெற்றி கழகம் சார்பில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில், முதலமைச்சர் வேட்பாளராக விஜயை முன்மொழிந்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் பின்னணியில்தான் தற்போது இந்த ஹேஸ்டேக் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

ஏற்கனவே விஜய்யை தங்களது கூட்டணிக்குள் இழுக்க அதிமுகவும் பாஜகவும் கங்கணம் கட்டிக்கொண்டு சுற்றி வருகின்றன. இந்த சூழலில் விஜய் தன்னை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்திக் கொண்டதால் அவரை கூட்டணிக்கு அழைப்பதில் எடப்பாடி பழனிசாமிக்கு சிக்கல் நிலவுவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

தவெக தலைவர் விஜய் பாஜகவை தனது கொள்கை எதிரி என்று கூறும் நிலையில், அவர் பாஜக அங்கம் வகிக்கும் அதிமுக கூட்டணியில் செல்வதற்கு வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. ஆனாலும் விஜயை தங்களுடன் இணைத்துக் கொண்டால், வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி காய் நகர்த்தி வருகிறார்.

இந்த நிலையில் விஜய் தன்னை முதலமைச்சர் வேட்பாளராக நிலைநிறுத்திக் கொண்டதுடன், கட்சி நிர்வாகிகளுக்கும் பேனர் அடிப்பதற்கான உத்தரவை வாய்மொழியாக பிறப்பித்ததால் எடப்பாடி பழனிசாமியின் அழைப்பை விஜய் திட்டவட்டமாக நிராகரிப்பது தெரிய வந்துள்ளது. இது தவிர தேர்தலை திமுக, தவெக இடையே தான் நேரடி போட்டி என்ற கோணத்தில் தவெகவினர் அணுகுகின்றனர்.

அதேசமயம் பொது மேடையில் அதிமுக-வை விஜய் இதுவரை வெளிப்படையாக விமர்சிக்காததால், அவரது அடுத்த கட்ட நகர்வு என்ன வேண்டுமானாலும் இருக்கலாம் என அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

Trending News

Latest News

You May Like