1. Home
  2. தமிழ்நாடு

ஆண்டுக்கு சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் வசூலித்து உதயநிதியிடம் தருவது தான் போக்குவரத்துத்துறை அமைச்சர் வேலை..!

1

ஏப்ரல் 14ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி, திமுக எம்பி டி.ஆர்.பாலு மற்றும் சில அமைச்சர்களின் சொத்து விவரங்கள் பட்டியலை திமுக பைல்ஸ் என்ற பெயரில் வீடியோவாக வெளியிட்டார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.

இந்த பட்டியல் வெளியிட்ட பிறகு முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி, திமுக எம்.பி.டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் அண்ணாமலை மீது அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளனர்.இந்த சூழலில் இரண்டாவது திமுக பைல்ஸ் 2-ஐ வெளியிடுவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று ஆளுநரைச் சந்தித்து அதற்கான ஆவணங்களை ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் வழங்கியுள்ளார். இதுகுறித்து அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், “இன்று, தமிழ்நாடு பாஜக மூத்த தலைவர்களுடன், தமிழக ஆளுநர்  ரவியை சந்தித்தோம். ஆளுநரிடம், திமுக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுக முதல் குடும்பத்துடன் தொடர்புள்ள பினாமி தகவல்கள் அடங்கிய, திமுக ஃபைல்ஸ் பகுதி 2 ஆவணங்களையும், மேலும்  ரூ.5600 கோடி மதிப்பிலான 3 ஊழல் குறித்த ஆதாரங்களையும் வழங்கி, இது தொடர்பாக அவர் தலையிட்டு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளோம்” என்று பதிவிட்டுள்ளார்.

திமுக அமைச்சர்களின் பினாமி நிறுவனங்கள் வருமான வரி செலுத்தாமல் வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார். ஆண்டுக்கு சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் வசூலித்து உதயநிதி ஸ்டாலினிடம் ஒப்படைப்பதுதான் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரின் வேலை என அவரது உதவியாளர் ஒருவர் ஏஜெண்ட்டிடம் பேசுவது போன்ற ஒரு ஆடியோவையும் வெளியிட்டுள்ளார்.

1

இதற்கு பிரதிபலனாக அமைச்சர் சிவசங்கர் மனைவில் காயத்ரி தேவியின் நிறுவனமான ரோஸ் ஃபெர்டலிட்டி மருத்துவமனை அரசுப் பேருந்துகளில் விளம்பரம் செய்ய அனுமதிக்கப்படுவதாகவும் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார். தமிழ்நாடு மெடிக்கல் சர்வீஸஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் பூச்சிக்கொல்லி மற்றும் மருந்து விநியோகம் செய்ததில் ஊழல் செய்துள்ளதாகவும் ஊழல் செய்த நிறுவனங்களின் பெயர்களையும் அந்த வீடியோவில் பட்டியிலிட்டுள்ளார். இறுதியாக இதற்காவது திமுக அரசு பதில் சொல்லுமா? என்ற கேள்வியையும் அண்ணாமலை முன்வைத்துள்ளார். 


 

Trending News

Latest News

You May Like