போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு ரூ.10,000 வரை ஊதிய உயர்வு..!
தமிழகத்தில் உள்ள போக்குவரத்து ஊழியர்கள் அவ்வப்போது காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டம், அகவிலைப்படி, ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த வகையில், தற்போது வரையிலும் அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கான கோரிக்கையை அரசு நிறைவேற்றாத நிலையில் அதற்கான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கோவா மாநிலத்தில் உள்ள போக்குவரத்து ஊழியர்களுக்கு மாதாந்திர ஊதியத்தை உயர்த்துவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. அதாவது, மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் பேருந்து ஓட்டுனர்கள், நடத்துனர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு 5% வரையிலும் ஊதிய உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது ஓட்டுனர்கள், உதவியாளர்கள் துப்புரவு பணியாளர்களுக்கு ரூ.5,500 முதல் ரூ. 10,000 வரையிலும் ஊதிய உயர்வு வழங்கப்பட்டிருக்கிறது.