1. Home
  2. தமிழ்நாடு

திருநங்கையை காதலித்த இளைஞர் !! வீட்டில் எதிர்ப்பு !! ஒன்றாக தனிக் குடுத்தனம் !! திடீரென 2 பேரும் தற்கொலை..

திருநங்கையை காதலித்த இளைஞர் !! வீட்டில் எதிர்ப்பு !! ஒன்றாக தனிக் குடுத்தனம் !! திடீரென 2 பேரும் தற்கொலை..


புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்துள்ள திருநள்ளாறு பகுதியை சேர்ந்தவர் திலீப் (26) நிரவி பகுதியை சேர்ந்த ஷிவானி என்பவரை திலீப் காதலித்தார்.ஷிவானி ஒரு திருநங்கை (30). இவர்களுக்குள் 6 மாதத்துக்கு முன்பு தான் பழக்கம் ஏற்பட்டது.

திருநங்கையை காதலித்த இளைஞர் !! வீட்டில் எதிர்ப்பு !! ஒன்றாக தனிக் குடுத்தனம் !! திடீரென 2 பேரும் தற்கொலை..

பழக்கம் ஏற்பட்ட நாளில் இருந்தே இவர்களுக்குள் காதல் ஏற்பட்டுள்ளது. இந்த விஷயம் திலீப் வீட்டிற்கு தெரிய வந்துள்ளது. ஒரு திருநங்கையை மகன் காதலிப்பதை அவர்கள் ஏற்கவே இல்லை.

அதனால் மகனை கண்டித்துள்ளனர். ஆனால் ஷிவானியை அவ்வளவு எளிதாக திலீப்பால் மறக்க முடியவில்லை. எனவே, கடந்த மாதம் வீட்டை விட்டு வெளியே வந்துவிட்டார். ஷிவானியை அழைத்து கொண்டு காரைக்கால் ஒடுதுறை பகுதியில் தனியாக ஒரு வீடு எடுத்து இருவரும் வசித்து வந்தனர்.

ஆனால் சில நாட்களிலேயே சண்டை போட ஆரம்பித்து விட்டனர். அடிக்கடி தகராறு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் இன்று 2 பேருமே வீட்டில் பிணமாக கிடந்தனர். ஆளுக்கு ஒரு பக்கம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

தகவலறிந்த நிரவி போலீசார் விரைந்து சென்று 2 சடலங்களையும் கைப்பற்றி காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு போஸ்ட் மார்ட்டம் செய்ய அனுப்பி வைத்தனர். இவர்களுக்குள் என்ன பிரச்சனை என்று காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newstm.in

Trending News

Latest News

You May Like