முதன் முறையாக தெலுங்கானா சட்டமன்ற தேர்தலில் திருநங்கை போட்டி..!

வாரங்கல் ரமணா பேட்டையை சேர்ந்த லயா கல்லூரி படிப்பை முடித்துள்ளார். அவர் டெல்லியில் உள்ள கால் சென்டரில் ஆபரேட்டராக பணியாற்றினார். அந்த நேரத்தில் பகுஜன் சமாஜ் கட்சியில் சேர்ந்து பணியாற்றி உள்ளார்.
தொடர்ந்து சொந்த ஊருக்கு வந்த அவர் கட்சியுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டார் . மேலும் சமூக சேவைகளிலும் ஈடுபட்டார். இதனை தொடர்ந்து பகுஜன் சமாஜ் கட்சி தெலுங்கானா தலைவர் பிரவீன் குமார் தேர்தலில் போட்டியிடுமாறு அழைப்பு விடுத்தார்.
இதனையடுத்து லயாவுக்கு தேர்தலில் போட்டியிட சீட் வழங்கப்பட்டுள்ளது. அவர் வீடு வீடாகச் சென்று பகுஜன் சமாஜ் கட்சியின் கொள்கைகளை விளக்கி கூறி பிரசாரத்தை தொடங்கியுள்ளார். சமூகத்தின் ஒதுக்கப்பட்ட பிரிவினருக்கு சேவை செய்ய அனுமதிக்க வேண்டும் என அவர் வாக்காளர்களிடம் வேண்டுகோள் விடுத்தார். தெலுங்கானாவில் முதன்முறையாக திருநங்கை போட்டியிடுவது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.