1. Home
  2. தமிழ்நாடு

சென்னையில் இருந்து திருப்பதி செல்லும் விரைவு ரயில்கள் ரேணிகுண்டாவுடன் நிறுத்தப்படும்..!

Q

சென்னையில் இருந்து திருப்பதி செல்லும் விரைவு ரயில்கள் ரேணிகுண்டாவுடன் நிறுத்தப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
பராமரிப்புப் பணிகள் காரணமாக மே 15 முதல் 31 வரை ரேணிகுண்டா மற்றும் திருப்பதி இடையே இயக்கப்படும் ரயில்கள் இருவழித்தடங்களிலும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரலிருந்து காலை 6.25 மணிக்கு திருப்பதி செல்லும் சப்தகிரி விரைவு ரயில் ரேணிகுண்டா மற்றும் திருப்பதி இடையே பகுதியளவு ரத்து செய்யப்படுகிறது. அதேபோல், திருப்பதியில் இருந்து மாலை 6.05 மணிக்கு சென்னை சென்ட்ரல் செல்லும் சப்தகிரி விரைவு ரயில் திருப்பதி மற்றும் ரேணிகுண்டா இடையே பகுதியளவு ரத்து செய்யப்படுகிறது.
சென்னை சென்ட்ரலிருந்து பிற்பகல் 4.25 மணிக்கு திருப்பதி செல்லும் விரைவு ரயில் ரேணிகுண்டா மற்றும் திருப்பதி இடையே பகுதியளவு ரத்து செய்யப்படுகிற
 அதேபோல், திருப்பதியில் இருந்து காலை 10.10 மணிக்கு சென்னை சென்ட்ரல் செல்லும் விரைவு ரயில் திருப்பதி மற்றும் ரேணிகுண்டா இடையே பகுதியளவு ரத்து செய்யப்படுகிறது.

Trending News

Latest News

You May Like