1. Home
  2. தமிழ்நாடு

நவ.16 வரை மலை ரயில் சேவை ரத்து..!

1

சேலம் கோட்ட ரயில்வே அதிகாரிகள் கூறும்போது, ‘‘கடந்த 3-ம் தேதி இரவு பெய்த மழைக்கு, மேட்டுப்பாளையம் - குன்னூர் மலை ரயில் பாதையில் மண்சரிவு ஏற்பட்டதால் 7-ம் தேதி வரை மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, பராமரிப்பு பணி முடிந்து கடந்த 8-ம் மீண்டும் மலை ரயில் இயக்கப்பட்டது. இந்நிலையில், கோவை, நீலகிரி மாவட்டங்களில் பெய்து வரும் கன மழையால், குன்னூர் மலை ரயில் பாதையில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் மண் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்துள்ளன.

கல்லாறு பகுதியில் ரயில் பாதையில் மண் அரிப்பு ஏற்பட்டு, வெள்ளத்தில் ஜல்லிக்கற்கள் அடித்துச் செல்லப்பட்டன. இதனால், மேட்டுப்பாளையம் – குன்னூர் இடையிலான மலை ரயில் சேவை வரும் 16-ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. கோவை, நீலகிரி மாவட்டங்களில் மழை நீடிக்கும் என்ற தகவலை தொடர்ந்து, உதகை - குன்னூரிடையேயும் 13-ம் தேதி வரை மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது’’ என்றனர்.

 

Trending News

Latest News

You May Like