பறக்கும் ரயில் சேவை பகல் 12 :15 முதல் ரத்து..! பயணிகள் அவதி
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் பெய்து வரும் மழை தீவிரமாகியுள்ளதால் பணிக்கு செல்பவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பலரும் தங்களது சொந்த வாகனங்களை தவிர்த்துவிட்டு, பொது போக்குவரத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், மழை காரணமாக மெட்ரோ ரயில் சேவையில் எந்த தடையுமில்லை என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது; மெட்ரோ ரயில் சேவைகள் வழக்கம்போல தாமதமின்றி தொடங்கப்பட்டுள்ளன. பயணிகள் இந்த சேவையைப் பயன்படுத்தி தங்கள் பயணங்களைத் திட்டமிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அனைத்து மெட்ரோ நிலையங்களிலும் படிக்கட்டுகளைப் பயன்படுத்தும் போது பயணிகள் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.பயணிகள் தங்கள் வாகனங்களை இன்று (30-11-2024 )முதல் கோயம்பேடு மெட்ரோ, செயின்ட் தாமஸ் மவுண்ட் மற்றும் அரும்பாக்கம் மெட்ரோ நிலைய வாகன நிறுத்துமிடங்களில் நிறுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இந்நிலையில் சென்னை பறக்கும் ரயில் சேவை பகல் 12 :15 முதல் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்