1. Home
  2. தமிழ்நாடு

இந்த எக்ஸ்பிரஸ் ரயில் ஏப்ரல் 1 முதல் 5 நாட்களுக்கு ரத்து..!

1

தமிழக மக்கள் பலர் பொதுப்போக்குவரத்தில் முக்கியமான ரயில் சேவையை நம்பி இருக்கின்றனர். இந்நிலையில் ரயில் பாதை பராமரிப்பு பணி காரணமாக சேலம் எஸ்வந்த்பூர் இடையே ரயில் சேவை ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 6 ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

இது குறித்து சேலம் கோட்ட ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சேலம் எஸ்வந்த்பூர் இடையே தருமபுரி ஓசூர் வழியாக இரு மார்க்கத்திலும் பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூரு பையப்பனஹள்ளி ரயில் நிலையத்தில் பொறியியல் பணிகள் மற்றும் ரயில்வே பாதை பராமரிப்பு பணிகள் நடக்கவுள்ளது.

இதன் காரணமாக சேலம் ஜங்ஷனிலிருந்து அதிகாலை 5.20 மணிக்கு புறப்படும் சேலம் எஸ்வந்த்பூர் வண்டி எண். 16212 பயணிகள் ரயிலானது வரும் 1ம் தேதி முதல் ஐந்தாம் தேதி வரை 5 நாட்களுக்கு ரத்து செய்யப்படுகிறது.

இதே போல் எஸ்வந்த்பூர் ரயில் நிலையத்தில் மாலை 3.55 மணிக்கு புறப்பட்டு சேலம் ஜங்ஷனுக்கு இரவு 9:45 மணிக்கு வந்தடையும் எஸ்வந்த்பூர் சேலம் பயணிகள் ரயில் வண்டி எண். 16211 வரும் இரண்டாம் தேதி முதல் ஆறாம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

Trending News

Latest News

You May Like