அமுலுக்கு வந்த நடைமுறை - இனி ரயில் பயண முன்பதிவு காலம் 60 நாட்களாக குறைப்பு..!
இந்தியாவின் மிக பெரிய பயணிகள் சேவை நிறுவனமான இந்திய ரயில்வே லட்சக்கணக்கான பணியாளர்களோடு இயங்கி வருகிறது. தினமும் நூற்றுக்கணக்கான ரயில்கள் லட்சக்கணக்கான பயணிகளை சுமந்து இந்தியாவின் பல்வேறு மூலைகளுக்கும் பயணிக்கிறது.
இது ஒரு புறம் இருக்க ரயில்வே முன்பதிவிலும் பல்வேறு சிக்கல்கள் இருக்கிறது. 120 நாட்களுக்கு முன்பு ரயில்வேயில் எதிர்கால பயணத்துக்காக டிக்கெட் முன்பதிவு செய்யலாம். விழா காலங்கள் உள்ளிட்டவற்றுக்காக ரயில்களில் டிக்கெட் முன்பதிவு வசதி இருக்கிறது. ஆனால் நீண்டகால எதிர்கால பயணத்திட்டத்தின் படியே தற்போது டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் வசதி வழங்கப்பட்டு வந்தது. இனி அவ்வளவு நாட்கள் காத்திருக்க தேவையில்லை. பயண தேதிக்கு 60 நாட்கள் முன்கூட்டி மட்டுமே ரயில்வே டிக்கெட் புக்கிங் செய்து கொள்ளும் வசதி நவம்பர் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வரும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்தது.
அதன்படி நேற்று முதல் பயணிகள் தங்கள் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம். அதே நேரத்தில் ஏற்கனவே 120 நாட்களுக்கு முன்கூட்டி ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. 31.10.2024 நள்ளிரவு முதலில் இந்த வசதி அறிமுகத்துக்கு வந்துள்ளது.
பண்டிகை காலம் தொடங்கி சாதாரண ரிசர்வேஷன் வரை அனைத்திற்கும் 120 நாட்கள் முன்னரே பதிவு செய்வதற்கான வசதிகள் வழங்கப்பட்டு வந்தன. ஆனால் இனி அப்படி இல்லை இனிமேல் பயணம் செய்யும் நாள் தவிர்த்து அதற்கு முன்னதாக 60 நாட்கள் முன்கூட்டி மட்டுமே ரயில் டிக்கெட் புக்கிங் செய்து கொள்ள முடியும். இந்த புதிய விதி நவம்பர் 1ஆம் தேதியில் இருந்து அமலுக்கு வந்துள்ளது.
இந்நிலையில், இதற்கு முன்னதாக 120 நாள் முன்கூட்டிய ரயில் டிக்கெட் புக் செய்திருப்பவர்களுக்கு எந்த பாதிப்பும் வராது. அவர்கள் தங்கள் புக்கிங் தேதிகளில் பயணிக்கலாம். கடந்த வியாழக்கிழமை இரவு (31.10.2024) வரை செய்யக்கூடிய 120 நாள் முன்கூட்டிய ரயில் டிக்கெட் புக்கிங் செல்லுபடியாகும் என ரயில்வே நிர்வாகம் ஏற்கனவே விளக்கம் அளித்திருந்தது. 31.10.2024 வரை புக்கிங் செய்யும் 60 நாட்களுக்கு மேலான ரயில் டிக்கெட்களை கேன்சல் செய்ய அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.