ரயில் பயணிகளே இது உங்களுக்காக..! 45 பைசா செலவு செய்தால் ரூ. 10 லட்சம் காப்பீடு வழங்கப்படுகிறது..!

ரயில்களில் எப்போதுமே கூட்டம் அலைமோதும்.ரயில்களில் பயணம் செய்வது சொகுசாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும். மிக முக்கியமாக ரயில்களில் டிக்கெட் செலவும் மிக மிகக் குறைவு.
ஒருபுறம் ரயில்களுக்கான தேவை அதிகமாக இருந்தாலும் இன்னொருபுறம் ரயில் விபத்துக்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மிகப் பெரிய ரயில் விபத்துகள் நாட்டையே உலுக்கின. பயணிகளுக்கு காப்பீடு வசதியையும் இந்திய ரயில்வே வழங்குகிறது. உண்மையில் ரயில்களில் வழங்கப்படும் காப்பீடு என்பது மிகவும் அதிகம். ஆனால் அதற்கான பிரீமியம் தொகை மிக மிகக் குறைவு. அதாவது, 10 லட்சம் காப்பீடு வெறும் 45 பைசாவுக்கு வழங்கப்படுகிறது.
பயணிகளுக்காக இந்திய ரயில்வே பயணக் காப்பீட்டை வழங்குகிறது. டிக்கெட் முன்பதிவு செய்யும் போது காப்பீட்டு வசதியைத் தேர்வு செய்யும் ரயில் பயணிகளுக்கு இந்தக் காப்பீட்டின் பலன் கிடைக்கும். பல பயணிகளுக்கு இந்த காப்பீடு பற்றி தெரியாது. டிக்கெட் வாங்கும் போது இந்த காப்பீட்டையும் சேர்த்து வாங்க வேண்டும். அப்போதுதான் பயணிகளுக்கு இதன் பலன் கிடைக்கும். இந்த காப்பீட்டிற்கு பயணிகள் வெறும் 45 பைசா மட்டுமே செலுத்த வேண்டும்.
ரயில்வே பயணக் காப்பீடு என்பது ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளுக்குக் கிடைக்கும். ஒருவேளை பயணிகள் டிக்கெட்டை ஆஃப்லைனில் முன்பதிவு செய்தால் இது கிடைக்காது. அதாவது டிக்கெட் கவுண்டர் வழியாக வாங்கும் டிக்கெட்களுக்கு காப்பீட்டின் பலன் கிடைக்காது. இன்சூரன்ஸ் எடுக்கலாமா வேண்டாமா என்பது முற்றிலும் பயணிகளின் விருப்பம்தான். பயணிகள் விரும்பினால் காப்பீட்டை மறுக்கலாம். பொதுப் பெட்டிகளில் உள்ள பயணிகள் காப்பீட்டின் கீழ் வருவதில்லை.
ஒருவேளை ரயில் விபத்தில் மரணம் ஏற்பட்டால் 5 லட்சம் ரூபாயும், பலத்த காயம் அடைந்தவர்களுக்கு 2.5 லட்சம் ரூபாயும், சிறு காயம் அடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும் இழப்பீடாக வழங்கப்படுகிறது. முறையற்ற செயலால் இறந்தால் 1.5 லட்சமும், பலத்த காயம் ஏற்பட்டால் 50,000 ரூபாயும், சிறிய காயம் ஏற்பட்டால் 5,000 ரூபாயும் வழங்கப்படும். ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது பயணிகள் இந்த விருப்பத்தை தேர்வு செய்யலாம்.
அதேசமயம் முழு ஊனமுற்ற ஒருவருக்கு 10 லட்சம் ரூபாய் காப்பீடு கிடைக்கும். விபத்து காரணமாக பகுதி ஊனம் ஏற்பட்டால் அந்த நபருக்கு 7.5 லட்சம் ரூபாய் காப்பீடு வழங்கப்படுகிறது. காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டால் இரண்டு லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது.