திடீரென தடம் புரண்ட ரயில்.. அதிர்ச்சி..!

திருவாரூர் ரயில் நிலையத்தில் இருந்து புதிய ரயில் பாதை பணிக்காக ஜல்லி கற்களை ஏற்றிக்கொண்டு 12 பெட்டிகளுடன் காரைக்கால் நோக்கி புறப்பட்டது. அப்போது ரயில் இன்ஜின் தடம் புரண்டு ரயில் விபத்துக்குள்ளானது. இது குறித்து ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தற்போது சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. ரயில் பெட்டிகளை மாற்று இஞ்சின் மூலமாக காரைக்காலுக்கு எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வேதாரண்யம் அகத்திய மலை பகுதியில் இருந்து திருவாரூர் நோக்கி வரக் கூடிய ரயில் பாதை இந்த விபத்து நடந்துள்ளது. அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.