சத்தீஸ்கரில் தடம் புரண்டு ரயில் விபத்து..!

சத்தீஸ்கரின் ஜாஞ்ச்கிர் -சம்பா மாவட்டத்தின் அகல்தாரா ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் விபத்துக்குள்ளானதில் அதன் 9 பெட்டிகள் தடம் புரண்டன. அகல்தாரா பகுதியில் நடைபெற்ற இந்த விபத்தில் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை. தகவலறிந்த ரயில்வேத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.எட்டு பின்புற வேகன்கள் மற்றும் பிரேக் வேன் ஆகியவை ரயிலில் இருந்து துண்டிக்கப்பட்டு தடம் புரண்டது, தடங்கள் மற்றும் OHE (மேல்நிலை உபகரணங்கள்) லைன் கம்பங்களுக்கு சேதம் விளைவித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தடம்புரண்ட ரயில் பெட்டிகளில் சரக்குகள் எதுவும் கொண்டு செல்லப்படாததால் பெரும் சேதம் எதுவுமில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.மேலும் ரயில் தடம் புரண்டதால் ஹவுரா-மும்பை மேல் மற்றும் கீழ் பாதையில் ரயில்களின் இயக்கம் தடைபட்டதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்திற்கான சரியான காரணம் விசாரணைக்கு பிறகே தெரியவரும் என்றும் அவர் கூறினார்.