1. Home
  2. தமிழ்நாடு

விழுப்புரத்தில் ரயில் தடம்புரண்டு விபத்து..!

Q

விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரிக்கு யூனிட் ரயில் ஒன்று இன்று(ஜன.14) புறப்பட்டுச் சென்றது. சிறிது நேரத்தில் ரயில் நிலையம் அருகே ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.

இந்த ரயிலில் மொத்தம் 8 பெட்டிகள் இணைக்கப்பட்டு உள்ளன. அதில், 6வது பெட்டி திடீரென தண்டவாளத்தில் இருந்து இறங்கி தடம்புரண்டது.

விபத்து குறித்து தகவலறிந்த ரயில்வே அதிகாரிகள் உடனடியாக சம்பவ பகுதிக்கு விரைந்தனர். தடம்புரண்ட பெட்டியை அகற்றும் பணியில் அவர்கள் இறங்கி உள்ளனர்.

ரயில் தடம்புரண்டதால் சென்னையில் இருந்து நாகர்கோவில் செல்லும் வந்தே பாரத் ரயில் விழுப்புரம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் பொங்கலை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்ல இருந்த பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

Trending News

Latest News

You May Like