திருமண நாளில் விபரீதம்.. பிச்சை கேட்பது போல் நடித்து பணம், நகை கொள்ளை !!

திருமண நாளில் விபரீதம்.. பிச்சை கேட்பது போல் நடித்து பணம், நகை கொள்ளை !!

திருமண நாளில் விபரீதம்.. பிச்சை கேட்பது போல் நடித்து பணம், நகை கொள்ளை !!
X

திருமண நாளை கொண்டாட தயாராக இருந்தப்போது வீட்டில் புகுந்த கொள்ளை கும்பல் நகை, பணத்தை திருடிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காட்டை அடுத்த மணலிவிளை பகுதியில் பிரதீஷ்குமார்- ஸ்ரீஜா ஷாமிலி தம்பதி வசித்து வருகின்றனர். திருமணத்திற்கு பின் பிரதீஷ்குமார் மணலிவிளை பகுதியில் தோப்பிற்கு நடுவே தனி வீட்டில் மனைவி மற்றும் தாயுடன் வசித்து வருகிறார். இந்த தம்பதியருக்கு ஆறு மாத கைக்குழந்தை உள்ளது.
இந்த நிலையில் கடந்த 5 மாதங்களுக்கு முன் வெளிநாடு சென்ற பிரதீஷ்குமார் டிசம்பர் 1ஆம் தேதியான நேற்று திருமண நாளை கொண்டாடும் விதத்தில் கடந்த இரண்டு மாதத்திற்கு முன் சொந்த ஊர் திரும்பினார்.

பிரதீஷ்குமார் நேற்று நோய்வாய்பட்ட தனது தாயை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். வீட்டில் கைக்குழந்தையுடன் தனியாக இருந்த ஸ்ரீஜா ஷாமிலி தனது கணவரின் தங்கை பிரதி என்பவருடன் செல்போணில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டின் முன் வந்த இரண்டு ஆண்கள் மற்றும் ஒரு பெண் கொண்ட குழு ஸ்ரீஜா ஷாமிலியிடம் பிச்சை கேட்டுள்ளனர்.

gold money

ஆனால், யாசகம் தர மறுத்த அவர் செல்போணில் பேசிக் கொண்டிருந்த தனது கணவரின் தங்கையிடம் கடந்த மூன்று நாட்களாக சந்தேகத்திற்கு இடமாக யாசகம் கேட்டு வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் இன்றும் யாசகம் கேட்டு வந்துள்ளதாக கூறிய நிலையில் அவர் முன் கதவை பூட்ட அறிவுறித்திய நிலையில் ஸ்ரீஜா ஷாமிலி முன்பக்க கதவை பூட்டியுள்ளார். சுதாகரித்து கொண்ட மர்ம கும்பல் பின்பக்க கதவு வழியாக உள்ளே புகுந்து ஸ்ரீஜா ஷாமிலி முகத்தில் மயக்க மருந்து பொடியை வீசியுள்ளது. இதில் அரை மயக்கத்துடன் காணப்பட்ட அவரிடம் இருந்து அந்த கும்பல் தாலி சங்கிலி வளையல் கம்மல் ஆயவற்றை கழற்றினர். மேலும் பிரோவில் இருந்த நகைகள் என 25 சவரன் உள்ளிட்ட சுமார் பத்து லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை கொள்ளையடித்து ஸ்ரீஜா ஷாமிலி மற்றும் கைக்குழந்தையை அறையில் வைத்து பூட்டி விட்டு அந்த கும்பல் தப்பி சென்றுள்ளது.

இதற்கிடையில் ஷாமிலியிடம் செல்போனில் பேசிக்கொண்டிருந்த அவரது கணவரின் சகோதரி சந்தேகம் அடைந்து தனது கணவருடன் அங்கு சென்றார். பூட்டப்பட்டிருந்த அறை கதவை திறந்து பார்த்த போது ஸ்ரீஜா ஷாமிலி கட்டிலில் கைக்குழந்தையுடன் மயக்க நிலையில் கிடந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்த்ததோடு மண்டைக்காடு போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.

gold money

இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொள்ளை கும்பலை பிடிக்க சப் இன்ஸ்பெக்டர் ஜாண் போஸ்கோ தலைமையில் 10 பேர் கொண்ட தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.

இது குறித்து காவல்துறை தரப்பில் கூறப்படுவதாவது, கடந்த 3 நாட்களாக சந்தேகப்படும் படியான 3 பேர் கொண்ட மர்ம கும்பல் சுற்றிவந்ததாகவும். ஸ்ரீஜா ஷாமிலி வீட்டை கண்காணித்து நோட்டமிட்டு வந்துள்ளனர். சந்தேகம் எழுந்த பின்னரும் பட்டதாரி பெண் அவசர போலீஸ் எண்ணுக்கோ காவல் நிலையத்திற்கோ தகவல் கொடுக்கவில்லை. இனிமேல் சந்தேகப் படும்படியான தெரியாத நபர்கள் தொடர்ந்து வீட்டிற்கு வந்தால் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அவ்வாறு தெரிவித்தால் இது போன்ற கொள்ளை சம்பவங்களை தவிர்க்கலாம் என்று சுட்டிக்காட்டினர்.

newstm.in

Next Story
Share it