பாதயாத்திரையில் நடந்த சோகம்..! கார் மோதி இருவர் பலி..!

ஒட்டன்சத்திரம் அருகே பழைய கன்னிவாடி, கரிசல்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் புவனேஸ்வரன், 21. காரில் ஒட்டன்சத்திரம் நோக்கி சென்றார்.
நேற்று அதிகாலை 5:00 மணிக்கு, ஒட்டன்சத்திரம் ரோட்டில் உள்ள சாலைப்புதுார் எட்டுக்கை காளியம்மன் கோவில் அருகே சென்றபோது, மதுரையில் இருந்து பழனிக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது கார் மோதியது.
இதில், மதுரை வடிவேலன் தெருவைச் சேர்ந்த அடைக்கல ராஜ், 27, மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த கேசவன், 17, சம்பவ இடத்திலேயே பலியாகினர். அழகர் என்பவர் ஒட்டன்சத்திரம் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சம்பவ இடத்தில் காரை நிறுத்தாமல் ஓட்டிச்சென்ற புவனேஸ்வரன், ஒட்டன்சத்திரம் போலீஸ் ஸ்டேஷனில் காருடன் சரணடைந்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.