உத்தரகாண்டில் சோக சம்பவம்..! பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 22 பயணிகள் பலி..!
உத்தரகண்ட் மாநிலம் அல்மோரா எல்லையில் உள்ள ராம்நகரில் குபி அருகே, 46 பயணிகளை ஏற்றி கொண்டு சென்ற பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில்,15 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் நீண்ட நேரம் போராடி உயிரிழந்த, 15 பேரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனை செய்ய மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த விபத்தில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. விபத்தில் சிக்கியவர்களை மீட்க பேரிடர் மீட்பு படையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டிருக்கின்றனர்.
காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது தான் விபத்துக்கான காரணம். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து உருண்டு ஓடும் வீடியோ காட்சிகள் சமூகவலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. வீடியோ பார்க்கும் போது, விபத்தில் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்பது போல் தெரிகிறது.