காலையில் அரங்கேறிய சோகம்..! உத்தரகண்டில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது; குழந்தை உட்பட 7 பேர் பலி..!

உத்தரகண்ட் மாநிலம் கேதார்நாத் தாமில் இருந்து குப்தகாஷிக்கு சென்று கொண்டிருநு்த ஆர்யன் ஏவியேஷன் நிறுவனத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் கவுரிகுண்ட் காடுகளில் விழுந்து நொறுங்கியது. இந்த ஹெலிகாப்டரில் விமானி மற்றும் குழந்தை உட்பட 7 பேர் பயணித்துள்ளனர்.
கேதார்நாத் தாமில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு குப்தாஷிக்கு ஹெலிகாப்டர் திரும்பி கொண்டிருந்த போது மோசமான வானிலை காரணமாக விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மீட்பு படையினர் விரைந்தனர். மீட்புபடையினர் நீண்ட நேரம் போராடி மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் விமானி மற்றும் குழந்தை உட்பட 7 பேர் உயிரிழந்தனர். உத்தரகண்ட், உத்தரபிரதேசம், மஹாராஷ்டிரா, குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது.