1. Home
  2. தமிழ்நாடு

காலையில் அரங்கேறிய சோகம்..! மத்திய பிரதேசத்தில் வேன்- லாரி மோதி 9 பேர் பரிதாப பலி..!

Q

மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஜபுவா மாவட்டத்தில் வேன்- லாரி மோதி விபத்து ஏற்பட்டது. திருமணம் நிகழ்ச்சிக்கு சென்று விட்டுவேனில் வீடு திரும்பி கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து வேன் மீது மோதி விபத்து ஏற்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் நீண்ட நேரம் போராடி மீட்பு பணி மேற்கொண்டனர். இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் பலத்த காயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.இந்த விபத்து அதிகாலை 2.30 மணிக்கு நிகழ்ந்துள்ளது.

துாக்க கலக்கத்தில் வாகனம் ஓட்டும்போது சற்று கண் அசந்தாலும் பெரும் விபத்து நேரிட்டு விடும். எனவே, இரவு, அதிகாலை நேரங்களில் பயணத்தை தவிர்க்க வேண்டும் என்பதை இந்த சம்பவம் உணர்த்துகிறது.

Trending News

Latest News

You May Like